பெண்ணை கோவில் வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவர்..!
நாகையில் கட்டிட வேலை செய்யும் பெண்ணை கோவில் வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை இழந்த அந்த பெண் கூலி வேலை செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் சகோதரி வீட்டிற்கு செல்லும் வழியில் அந்த பெண்ணை வழிமறித்த இருவர் அவரது வாயை பொத்தி இழுத்து சென்று அருகில் இருந்த கோவில் வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.






