--- --:--:-- --

திருவாடானை அருகே சாலை சீரமைக்கப்படாததால் பள்ளிக்கு குழந்தைகள் அனுப்பாத பெற்றோர்கள்..!

2

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பான்டுகுடி கிராமத்தில் இருந்து மங்கலகுடி சாலையை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை பாண்டுக்குடியில் இருந்து பிள்ளையாரேந்தல், ஆலம்பாடி, சுப்பிரமணியபுரம் வழியாக மங்களக்குடி செல்லும் சாலையை அடைகிறது.

 

இந்த சாலையில் தற்போது சீரமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் சாலையில் இருந்த நான்கு பாலங்கள் உடைக்கப்பட்டு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவ்வழியாகச் செல்லும் பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்லாது பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலை உள்ளது. மேலும் பள்ளியின் அருகிலேயே ஆபத்தான பெரும் பள்ளம் இருப்பதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு  அனுப்பாமல் புறக்கணித்து வருகின்றனர்.

பல முறை இது குறித்து எடுத்து கூறியும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அன்றாட தேவைகள் மட்டுமல்லாது மற்ற அனைத்து விஷயங்களுக்கும் வெளியில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதோடு இந்த சாலை வழியாக செல்லும் போது அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவித்தனர். சாலை சீரமைக்கப்படாத வரை தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்றும் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon