பாம்பன் பாலம் திறப்பு தேதி இறுதியானது..!
ராமநவமியான ஏப்ரல் 6 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
100 சதவீதம் நிறைவடைந்த பாலம் கட்டுமான பணியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் 6 ஆம் தேதி பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்ல உள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து 6ஆம் தேதி பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.






