பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் மூவர் கொலை
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமித்ஷா, ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடுதல் வேட்டையில் சுலைமான், ஆப்கன், ஜிப்ரன் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இவர்கள் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும், சுலைமான் என்பவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியாக செயல்பட்டதாகவும் கூறினார். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கவலையடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.





