--- --:--:-- --

நம்ம ஊரு திருவிழா – சென்னை சங்கமம் 2026

8

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைமணம் கமழும் சென்னை சங்கமம் இன்று முறைப்படி தொடங்குகிறது. எழும்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் இந்த விழாவில், 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைச் சென்னையின் 20 இடங்களில் அரங்கேற்ற உள்ளனர்.

 

. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஒருங்கினைப்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கலை விருந்து, இன்றும் அதே உற்சாகத்துடன் அரங்கேறுகிறது.

 

தலைநகர் சென்னை இன்று முதல் நாட்டுப்புறக் கலைகளின் சங்கமமாக மாறப்போகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நம் மண்ணின் பாரம்பரியக் கலைகளைக் கொண்டாடும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 2026’ கலைத் திருவிழாவைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

 

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இன்று (ஜனவரி 14) மாலை 6 மணியளவில் பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெறுகிறது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஒருங்கினைப்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கலை விருந்து, இன்றும் அதே உற்சாகத்துடன் அரங்கேறுகிறது.

 

பிரமிக்க வைக்கும் கலைஞர்கள்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள 1500-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். கலை வடிவங்கள்: கரகாட்டம், காவடியாட்டம், நையாண்டி மேளம் என நம் பாரம்பரியத்தின் அடையாளமான 50-க்கும் மேற்பட்ட கலை வடிவங்கள் பார்வையாளர்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

மெகா இசை நிகழ்ச்சி: தொடக்க விழாவில் மட்டும் 250 கலைஞர்கள் இணைந்து வழங்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன சங்கமம் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கும் இந்த கலைப் பயணம், பொங்கல் தினமான ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை சென்னையின் முக்கிய 20 இடங்களில் விரிவடைகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்காக இந்த நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

 

நமது மண்ணின் இசையும், தாளமும் சென்னையின் வீதிகளில் எதிரொலிக்கப் போகும் இந்த நான்கு நாட்களும் பொதுமக்களுக்குக் கலை மற்றும் பண்பாட்டு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Right Menu Icon