--- --:--:-- --

இன்று திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்..!

2

மொந்தா புயல் எதிரொலியாக இன்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், கடலூர், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

மேலும், மொந்தா புயல் கரையை கடந்ததும் கனமழை முடிவடையும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை மொந்தா புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Right Menu Icon