செங்கோட்டையனுடன் கைகோர்த்த OPS தரப்பு..!
EPS-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்து பேசி வருகின்றனர்.
இது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.






