--- --:--:-- --

கரூர் சம்பவம் வழக்கில் ஒருநபர் ஆணையம், எஸ்.ஐ.டி விசாரணை ரத்து!

4

ரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையை உலுக்கியது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார்.

 

விசாரணை முடிவில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர் யஷ் எஸ்.விஜய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 

இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

 

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ் சரியா ஆகியோர் அடங் கிய அமர் வு தீர்ப்புக்காக ஒத்தி வைத்தனர். இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கவும், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon