திருப்பூரில் இன்று நொய்யல் பொங்கல் மக்கள் திருவிழா..!
தமிழக அரசு, திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் நிட்மா சங்கம், திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம், ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய தமிழர் திருநாளான இன்று நொய்யல் பொங்கல் மக்கள் திருவிழா 2025 திருப்பூர், வளம் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் நதிக்கரையில் நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு விகடகவி கலைக் குழுவினரின் நாதஸ்வரம், தவில் மங்கள இசையுடன் தொடங்கியது. தமிழர்களின் பண்பாட்டில் சிறந்த சகோதர, சகோதரிகள் ஒற்றுமையுணர்வு மேம்படவும், நாடு செழித்து மக்கள் வளம் பெறவும், பண்டைய காலத்தின் மரபுப்படி பொங்கல் சீர் கொடுத்து வாழ்வு செழிக்கவும், மத ஒற்றுமை ஓங்கிடவும், சகோதரத்துவம் மேலோங்கிடவும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் புடைசூழ 501 பொங்கல் படைத்து இறைவழிபாடு நடந்தது.

தொடர்ந்து மண்ணரை சலங்கை ஒலி, வளர்பிறை வள்ளி கும்மியாட்டம், பெருஞ் சலங்கையாட்டம், செந்தமிழ் காவடி ஆட்டமும், தொடர்ந்து அருணாச்சலம் குழுவினரின் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பொங்கல் வழிபாடும், விகடகவி கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிராமிய நிகழ்ச்சிகளும், நொய்யல் மற்றும் மெட்ரோ இரயில் பற்றிய விகாஸ் வித்யாலயா, தெற்கு ரோட்டரி பாலபவன் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதனை தொடர்ந்து நொய்யல் பொங்கல் மக்கள் திருவிழா நிறைவு விழாவிற்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி வரவேற்றார்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் விழா சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் தெற்கு ரோட்டரி தலைவர் மோகன சுந்தரம், எம்.பி. சுப்பராயன், டீ முன்னால் தலைவர் சக்திவேல், பல்லடம் எம்.எல் ஏ, எம்.எஸ். எம். ஆனந்தன், வடக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சோழா அப்புக்குட்டி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், 3 ம் மண்டல தலைவர் கோவிந்தசாமி, 2 ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் உள்பட முக்கிய விருந்தினர்கள் வாழ்த்து பேசினார்கள்.

விழாவில் 1330 திருக்குறளை மனனம் செய்து சாதனை படைத்த கல்லூரி மாணவி ஓவியாவுக்கு சால்வை அணிவித்து பரிசாக திருவள்ளுவர் சிலை வழங்கி சிறப்பிக்கப்பட்டார். முடிவில் பொங்கல் திருவிழா திட்டத் தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திருப்பூர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






