--- --:--:-- --

9 லட்சம் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி : அமைச்சர் அன்பரசன்

7

சென்னையில் சுழற்சி முறையில் தொழில் முனைவோர் வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் புத்தாக்கமானவர்கள் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பரசன் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,98,012 மாணவர்களுக்கு தொழில் முனைவர் பயிற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

விரைவில் ஆயிரம் இளைஞர்கள் சுழற்சி முறையில் தொழில் முனைவோர் மற்றும் புத்தகப் பட்டையை படிப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக சென்னை கிண்டியில் பயிற்சி நிலையங்களை அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon