பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை : நாடாளுமன்றத்தில் ஸ்மிரிதி ராணி அதிரடி
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். மத்திய அரசில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் வகையில் மாதவிலக்கு விடுமுறைக்கு எந்த விலக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






