சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்..சாலையில் தப்பியோடிய பரபரப்பு..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் கைதாகி, தப்பி ஓடிய ஆயுதப்படை காவலர் ஒருவரை தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் வசித்து வரும் காதலர் பிரபாகரன் சொந்த கிராமமான சிறுவாச்சியூருக்கு சென்ற பொழுது சிறுமியை காதலித்ததாக கூறி கர்ப்பம் ஆக்கியுள்ளார். இது தொடர்பான வழக்கில் போக்சாவில் கைது செய்யப்பட்ட காவலர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொழுது போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார்.
அவரை அழைத்துச் செல்ல காவல் நிலையத்திற்கு முன்பு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் ஒருவர் இருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. தப்பிச்சென்ற பிரபாகரனை கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர்.






