தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்.எம்.சி. நோட்டீஸ்..!
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கைகளை மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்கம்போல அலட்சியப்படுத்தி உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். பேராசிரியா் வருகைப்பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல், சேவை, ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்கம்போல இந்த அறிக்கையை அலட்சியப்படுத்தி உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். அனைத்து காலிபணியிடங்களும் நிரப்பப்பட்டு, குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டன என மா.சு. தெரிவித்தாலும், நாட்டிலேயே அதிகமான அரசு மருத்துவக்கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலத்தில் எப்படி இத்தகைய குழப்ப நிலை நீடிக்கிறது என்று சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“சில மாதங்களுக்கு முன்பு மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக 2 ஆயிரத்து 246 மருத்துவர்களை முதன்மை சுகாதார நிலையங்களில் பதவிக்காக நியமித்தபோது, அந்தக் குழுவில் பல பட்டதாரிகள் இருந்தனர். அவர்களை மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பணியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு சுமார் 415 காலியிடங்கள் இருந்தன” என்று அவர் கூறினார்.
மாநில அரசு கடந்த வாரம் நடத்திய கவுன்சிலிங் மூலம் 328 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. செவ்வாய்க்கிழமை, கூடுதலாக 87 மருத்துவர்கள் கட்டாயமாக நியமனம் செய்யப்பட்டதாக சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இப்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு பணியிடமும் காலியாக இல்லை” என்றும் அவர் கூறினார்.
மேலும், தேசிய மருத்துவ ஆணைய (NMC) நிபந்தனைகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் உள்நுழையும்போதும், வெளியேறும் போதும் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “என்.எம்.சி. நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான ஒன்று. ஒழுங்குநிலை அமைப்பு குறைகளை சுட்டிக்காட்டுகிறது; அந்தக் குறைகள் திருத்தப்படுகின்றன; உரிய தலைமை மருத்துவர்கள் எழுத்து விளக்கங்களை அளிக்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டான்லி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி போன்ற கல்லூரிகளுக்கும் இது நடந்தது. இந்த ஆண்டு, பாஜக ஆளும் மாநிலங்களில் உட்பட இந்தியா முழுவதும் குறைந்தது 400 மருத்துவக் கல்லூரிகள் இதேபோன்ற அறிவிப்புகளைப் பெற்றுள்ளன” என்று அவர் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை ” மிகைப்படுத்துவதாக” விமர்சித்தார்.






