சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தகவல்..!
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு சார்ந்த சிபிஎஸ்சி சில விளக்கங்களை அளித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாணவர்களுக்கு தேர்வு அடிப்படையிலான முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மாணவர்கள் தனிப்பட்ட முறையிலான முடிவுகளை அறிய முடியாது என்றும் அந்தப் பள்ளிகள் மூலமாகவே முடிவுகளை அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்வுகளில் மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்கள் மற்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்து அதன் பிறகு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்வில் கொரொனா காரணமாக பங்கேற்க முடியாத மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டி காரணமாக பங்கேற்க முடியாத மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





