புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவி போடும் புதிய கண்டிஷன்கள்..!
தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே படங்களில் நடித்துள்ள நடிகை சாய்பல்லவி தெலுங்கு பட உலகிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு உள்ள முன்னணி கதாநாயகிகளுடன் நடித்துள்ள சாய் பல்லவி தற்பொழுது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. குறிப்பாக சாய்பல்லவி நடனத்திற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கதாபாத்திரம் மற்றும் கதைகள் தேர்வில் கவனமாக இருப்பதாகவும் கதையிலும் கதாபாத்திரத்தில் தனக்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் கதையில் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருக்கிறதா என்பதை பார்த்து பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்வதாகவும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முதன்மைத்துவம் இருக்க வேண்டும் என சாய்பல்லவி கண்டிஷன் போட்டுள்ளார்.
தனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியும் அவ்வளவுதானே தவிர ஒரு சிறந்த டான்சர் இல்லை எனவும் தனக்கு அது இயல்பாக வந்து விட்ட கலை எனவும் கூறியுள்ளார்.







