UPI பரிவர்த்தனையில் புதிய மாற்றம்..நாளை அமல்..!
UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளின் உச்ச வரம்பு அதிகரிப்பும் நாளை அமலாகிறது.
முன்னதாக ₹1 லட்சம் வரை UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்த முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






