--- --:--:-- --

இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் – அர்விந்த் கெஜ்ரிவால்

1

ன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் பிணை கிடைத்ததை அடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

 

6 மாத சிறைக்குப் பிறகு வெளியே வந்த அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து டெல்லியில் தொண்டர்கள் கூட்டத்துக்கு மத்தியில் உரையாற்றிய அர்விந்த் கெஜ்ரிவால், “இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.

 

இதில் மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை, அந்த நாற்காலியில் அமர மாட்டேன்.நிரபராதி என நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் அமரப்போவதில்லை. நான் நேர்மையானவன் எனத் தெரிந்தால் மக்கள் எனக்கு வாக்களிக்கட்டும். எனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைத்துவிட்டது.

 

இனி மக்கள் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும். மக்களின் உத்தரவுக்குப் பிறகே முதல்வர் நாற்காலியில் அமருவேன். நான் ராஜினாமா செய்த பிறகு கட்சியின் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். அடுத்த 2-3 நாட்களில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Right Menu Icon