புதிதாக 118 ஆம்புலன்ஸை துவக்கி வைத்துள்ள முதல்வர் பழனிசாமி..!
நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் 1, 005 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக வாங்கப்பட்ட 118 ஊர்திகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இவற்றில் 10 ஊர்திகள் ரத்ததான பயன்பாட்டுக்காக செயல்படும்.
இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆம்புலன்ஸ்கள் செயல்படும். செயற்கை சுவாச கருவி உள்ளிட்ட உயிர்காக்கும் 60 மருத்துவ சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த முதலமைச்சர் ஒரு ஊர்தியில் ஏறி அங்குள்ள வசதிகளை பார்த்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக வீர லட்சுமி என்ற ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.






