நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்..!
நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஸ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ளரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கியுள்ளனர்.
கோவிலுக்கு வெளியே இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்கள் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர்.






