தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை..!
தென்மேற்கு வங்க கடலில் உருவான ‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நடுக்கடலில் சூறாவளி காற்று, கடல் சீற்றம் மற்றும் தொடர் கனமழை பெய்து வருகிறது. பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதி மற்றும் மற்றும் கடலோர மீனவ கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணிக்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் காரைக்காலுக்கு விரைந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என் திருமுருகன் தலைமையில் மாவட்ட சார்பு ஆட்சியர் பூஜா முன்னிலையில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆவரசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பி.ஆர்.என் திருமுருகன் தெரிவித்ததாவது: தென்மேற்கு வங்க கடலில் உருவான ‘டித்வா புயல்’ காரணமாக நேற்று இரவு முழுவதும் இடைவிடாமல் தற்பொழுது வரை கனமழையானது பெய்து வருகிறது.
மழைக்கு முன்பு அதிக மழை நீர் எங்கும் பகுதிகளில் உள்ள வடிவேல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. அதனால் தண்ணீர் தேங்காத நிலை தற்பொழுது உள்ளது. இன்னும் தூர்வாறாத பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை நகராட்சி மூலம் வடிக்கும் பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.
மேலும் கனமழையானது நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நிர்வாகம் இந்த பேரிடரை எதிர் கொள்ள காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு முற்பதற்கும் மேற்பட்டோர் விரைந்துள்ளனர் அவர்களோடு காரைக்கால் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள தன்னார்வலர்கள் ஆகியோர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மாவட்ட முழுவதும் 91 நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன தேவைப்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அவ போதே செய்து வருகின்றது மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை 1070 1077 என்ற என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.






