அம்மா மருந்தகத்தை மூடக்கூடாது : எடப்பாடி பழனிச்சாமி
அம்மா மருந்தகங்களை மூட முடிவு எடுக்கப்பட்டு இருந்தால் அதனை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி வருவதாக குற்றம்சாட்டினார். அம்மா உணவகத்தில் பணியாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அம்மா குடிநீர் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அம்மா மருந்தகங்களை அரசு மூட உள்ளதாக தகவல் வெளியாக இருப்பதாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







