+2 விடுபட்ட தேர்வு இம்மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்க விடுபட்ட ஒரு தேர்வு இந்த மாதம் 27ஆம் தேதி நடத்தப்பட்டு 30-ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது இரண்டு ஆண்டு காலத்தில் க்யூ ஆர் கோடு என்று சொல்லக்கூடிய பாடத்திட்டத்தை பதிவு செய்து மாணவர்கள் படித்துக் கொள்ளலாம். செல்போன் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பு நம்முடைய மாநிலமான தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்றும் சிபிஎஸ்இயில் இல்லை என்றும் சிபிஎஸ்இ அதற்கு முயற்சிகள் மேற்கொண்டு தற்போது தான் அந்த திட்டத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
27ஆம் தேதி தேர்வு நடைபெறும் 30 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.






