--- --:--:-- --

தனது கணவருக்கு விலையுர்ந்த பைக்கை பரிசாக அளித்த மணிமேகலை !

13

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி, இதில் கலந்து கொண்ட பிரபலமானவர்கள். அதன்படி இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளார் மணிமேகலை. வாரம்தோறும் ஒளிபரப்பாகும் எபிசோடில் அவரை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை – ஹுசைன் வைத்திருந்த பைக் ஒன்று தொலைந்து விட்டதாக செய்தி பரவின. இது குறித்து மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களின் பைக் தொலைந்து போனது குறித்து பதிவிட்டு இருந்தார்.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட மணிமேகலையின் பைக் தொலைந்தது குறித்து கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் மணிமேகலை – ஹுசைன் தம்பதி விலையுர்ந்த புதிய பைக்கை வாங்கியுள்ளனர். மேலும் மணிமேகலை ஹுசைனின் பிறந்தநாள் பரிசு இந்த பைக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon