--- --:--:-- --

வாங்க, வந்து ஆட்சி அமையுங்க பட்னாவிஸ்!- மகாராஷ்டிரா ஆளுநர் திடீர் அழைப்பு

fatnavis

மகாராஷ்டிராவில், ஆட்சியமைக்குமாறு, தேவேந்திர ஃபட்னாசுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.

 

மகாராஷ்டிராவில், 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை பலத்திற்கு, 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களை வென்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி, ஆட்சி பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாட்டால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

 

பாஜக- சிவசேனா கருத்து வேறுபாடு நீடித்த நிலையில், நேற்று மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மறுபுறம், ஆட்சி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைக்கு வருமாறு, சிவசேனாவிற்கு பாஜக பலமுறை அழைப்பு விடுத்தும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அதை ஏற்கவில்லை.

 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கும்படி, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சி என்ற முறையில் ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon