--- --:--:-- --

அமைச்சர் எம்‌சி சம்பத்தின் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை..!

5

டலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்‌சி சம்பத்தின் ஆதரவாளர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அதிமுக பிரமுகர்களான மதியழகன், தமிழ்ச்செல்வன், பாலகிருஷ்ணன்சரவணன், சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

 

முதலாவதாகசுரப்பு நாயக்கன் சாவடியில் மதியழகன் என்பவரது வீட்டிலும் கடலூரில் பாலகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்த நிலையில் தமிழ்ச்செல்வன், மதியழகன் ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றுள்ளது.

 

நிர்வாகிகளின் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கிறது. சோதனைக்கு ஆளான அனைவரும் அமைச்சர் எம்‌சி சம்பத்தின் ஆதரவாளர்கள் . கடலூரில் திமுக சார்பில் தொழில் துறை அமைச்சர் சம்பத் போட்டியிடும் நிலையில் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon