நடுரோட்டில் உடைந்து சிதறிய மது பாட்டில்கள்..!
திருவண்ணாமலையில் பாதுகாப்பு இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட பழைய மது பாட்டில்களால் சாலைகளில் கண்ணாடி துகள்கள் சிதறின. தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பழைய மது பாட்டில்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது பாதுகாப்பில்லாமல் எடுத்து செல்லப்பட்ட பழைய மது பாட்டில்களால் பின்னால் வந்த வாகன ஓட்டுகள் அச்சமடைந்தனர். ஐந்து மீட்டருக்கு மேல் கண்ணாடி துண்டுகள் சிதறினா. இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






