சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சோனியா காந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஈடு செய்ய இயலாத இழப்பை தாங்கிக் கொள்ளும் மன உறுதியை கடவுள் அவருக்கு அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் இத்தாலியில் 27 ம் தேதி காலமானார். இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. உடல் நலம் குன்றியிருந்த தாயை பார்க்க சோனியாகாந்தி ஏற்கனவே இத்தாலி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






