திருச்செந்தூர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..!
முருகனின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, கோயில் ராஜகோபுரம் அருகே 8000 சதுர அடியில் பிரம்மாண்டமான, தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை யாகசாலை பூஜைகள் தொடங்கி, ஜூலை 7 அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.






