--- --:--:-- --

2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்..!

2

திருவண்ணாமலையில் இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில் இன்று கார்த்திகை தீபம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, கோயிலின் பின்புறம் உள்ள இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில், மகா தீபம் ஏற்றப்படும். இதற்கு தேவையான கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், நேற்று கொட்டும் மழையிலும் அதனை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர மலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

 

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், நடப்பாண்டு மகா தீபத்திற்கு, மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 6 அடி உயரம் கொண்ட இந்த கொப்பரை, 350 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

அதேபோல், கார்த்திகை தீபத் திருநாளான இன்று  கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தை காண கோயிலின் உள்ளே 7,500 பேருக்கும், மாலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Right Menu Icon