--- --:--:-- --

என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்! கைதுக்கு அஞ்சவில்லை – கமலஹாசன் பேட்டி!!

Kamal 05

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என்று, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, இன்று சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை. இது உருவான சர்ச்சை அல்ல. உருவாக்கப்பட்ட சர்ச்சை. கோட்சே குறித்து முன்பே பேசியுள்ளேன். தேர்தலில் வெற்றி நம்பிக்கை குறைந்ததால் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

 

வாலையும், தலையும் கத்தரித்து போட்டால் யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்; அவருக்கு சரித்திரம் பதில் சொல்லும். மெரினா கடற்கரையில் பேசியபோது கண்டுகொள்ளாதவர்கள், அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர்.

 

கோவை சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது. என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். எனவே, கைது செய்யாமல் இருப்பது நல்லது. கைதுக்கு நான் பயப்படவில்லை. பிரசாரத்திற்காக தான் நான் முன்ஜாமின் கோரினேன் என்று கமலஹாசன் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon