--- --:--:-- --

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..!

1

ரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

 

இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதி அடங்கிய அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று மாலை 3 மணிக்கு வெளியிட்டார்.

 

அதன்படி ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீக் குமார் தெரிவித்தள்ளார்.

 

ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவிற்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon