புதிய தார் சாலையில் ஆங்காங்கே முளைத்த பொருட்கள்..!
தரங்கம்பாடி அருகே தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள தார் சாலையில் புற்கள் முளைத்துள்ளதாகவும் கையாலே பெயர்க்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த மேல்மாத்தூர் ஊராட்சியில் 5 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மாதம் புதிதாக தார் சாலை போடப்பட்டது. தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் தற்போது சாலையில் பொருட்கள் முளைத்துள்ளன.
சாலையை கையால் பெயர்த்தாலே வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் புதிதாக போடப்பட்ட தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து தரமான தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






