மாவட்டம் வாரியாக ஆய்வு பணி..கோவை புறப்படுகிறார் முதலமைச்சர்..!
மாவட்டம் வாரியாக ஆய்வு பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட ஆய்வு பணியை கோவையில் நாளை தொடங்குகிறார்.
சென்னையில் இருந்து இரண்டு நாள் பயணமாக விமான மூலம் நாளை காலை கோவை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையத்திலிருந்து டைட்டில் பாருக்கு வளாகத்திற்கு செல்கிறார். புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கிறார்.
பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துணைவியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார் மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர் கோத்தனூர் பிஏஜி மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துணைவியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.
மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் கோத்தனூர் பிஏஜி மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னர் நாளை மறுநாள் காலை கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையில் ஒரு பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.






