ஓட்டுனரின் கவனக்குறைவால் குழந்தை மீது கார் ஏறிய பரிதாபம்..!
ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையின் மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சிலர் ஹைதராபாத்தில் தங்கியபடி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களின் கவிதா என்பவர் தனது மூன்று வயது குழந்தையை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தூங்க வைத்துவிட்டு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார்.
வீட்டிற்கு காரில் திரும்பிய குடியிருப்பு வாசி ஒருவர் தனது பார்க்கிங்கில் குழந்தை படுத்திருப்பதை கவனிக்காமல் காரை இயக்கியதில் குழந்தை அங்கேயே உயிரிழந்தது. காரை ஓட்டி வந்தவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





