நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கொலை வழக்கு- 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலையான கவினும், அவர் காதலித்த பெண்ணும் பள்ளி படிக்கும்போது இருந்து பழகி உள்ளனர்.
பள்ளி நட்பு காதலாக தொடர்ந்ததற்கு கைதான சுர்ஜித் எதிர்ப்பு தெரிவித்து, காதலைக் கைவிட வலியுறுத்தியும் கேட்காததால் கவின் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவரும் சிறப்பு காவல் படையின் உதவி ஆய்வாளர்களாக உள்ளனர்.
சுர்ஜித் கொலை செய்ய அவரது பெற்றோர் தான் தூண்டியதாக கவினின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.






