முகநூல் விவரங்களை அறிந்ததில் இந்தியா 2வது இடம்
சமூக வலைதளமான பேஸ்புக்கில் பயனாளிகள் குறித்து மத்திய அரசு விபரங்கள் கேட்டது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2019 ஆம் ஆண்டின் முதல் பாதி மாதங்கள் வரை 22,684 பயனாளிகளின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில் இதை அரையாண்டில் 16 ஆயிரத்து 580 பயனாளிகள் குறித்த விவரங்களை ஃபேஸ்புக் இடமிருந்து இந்தியா கேட்டிருக்கிறது.
2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பயனாளிகளின் விவரங்கள் அறிவது கணிசமாக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஃபேஸ்புக் இடமிருந்து இந்தியா 3 ஆயிரத்து 245 பயனாளிகள் குறித்த விவரங்களை இந்தியா கேட்டறிந்துள்ளது.
அதுவே 2016ஆம் ஆண்டின் இதே காலங்களில் 6,324 பயனாளிகள் குறித்தும், நடப்பாண்டில் 22,684 பயனாளிகள் பற்றியும் இந்தியா விவரங்களை கேட்டு அறிந்துள்ளது. முகநூலில் பயனாளிகள் விவரங்களை கேட்டதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஃபேஸ்புக்கிடமிருந்து அமெரிக்கா 50,741 ஒரு பயனாளிகளின் விவரங்களை கேட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா 22684 பயனாளிகள் குறித்தும், பிரிட்டன் 4,228 பயனாளிகள் பற்றியும் ஜெர்மனி 7,302 பயனாளிகள் பற்றியும் விவரங்களை கேட்டுள்ளன.





