வருமான வரி தாக்கல்:கால அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் செப்.15 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வருமான வரி தாக்க செய்ய ஜூலை 31 தேதி கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீங்கள் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், தாமதமாக தாக்கல் செய்ததற்கான வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். நிலுவையில் உள்ள வரிக்கு மாதந்தோறும் 1% வட்டி செலுத்த வேண்டும்.






