--- --:--:-- --

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம்..!

3

திருவாரூரில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள பரிவார மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. 76 வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

 

68 வயதான அவரது மனைவி சந்திரா கணவரின் இழப்பை தாங்க முடியாமல் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து அழுதபடியே இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்ததில் அவரது உயிர் பிரிந்தது.

 

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு செல்வதற்காக மகன் வெளிநாட்டில் இருந்து வருவதற்குள் தாயும் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. காதலர் தினத்தன்று இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினரின் இறுதி ஊர்வலத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Right Menu Icon