--- --:--:-- --

தீபாவளி போனஸ் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

1

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

 

அப்போது, ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் தசரா போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்க இருப்பதாகக் கூறினார்.

 

சுமார் 10 லட்சத்து 91 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக ஆயிரத்து 866 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Right Menu Icon