சட்டவிரோத பண பரிமாற்ற புகார் : நடிகர் மகேஷ்பாபுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்த நடிகர் மகேஷ்பாபு மீதான சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில், இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்துள்ளார். இந்த நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி அந்த இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது 5 கோடியே 90 லட்சம் ரூபாயை நடிகர் மகேஷ்பாபுவிற்கு அந்த நிறுவனங்கள் கட்டணமாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த தொகையில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செக்காகவும், 2 கோடி 50 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் மகேஷ்பாபு பெற்றுக்கொண்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.





