பல்ல கழட்டிடுவேன்.. வெளிய போயா.. அரசு அதிகாரி மிரட்டல்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உழுந்து விதைக்க ரசீது கேட்க வந்த விவசாயியை வேளாண் அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூகப் வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெள்ளம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தங்களது இடத்தில் பயிர் விதையிட உளுந்து வாங்கியதற்கு கோவிந்தராஜிடம் ரசீது கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவரும் அநாகரிகமாக பேசிக் கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் வேளாண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம் இது தொடர்பாக விரைவில் முழு விளக்கம் அளிக்க இருப்பதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார்.






