--- --:--:-- --

அதிமுக ஒருங்கிணைப்புக்கு 10 நாள் கெடுவை நான் விதிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

1

திமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும். யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்ற அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

 

இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விரைவில் நல்லது நடக்கும். பத்து நாட்கள் கெடு என்று நான் கொடுக்கவில்லை. மீடியா தவறாகப் புரிந்துகொண்டார்கள்.

 

பத்து நாட்களுக்குள் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதம் ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருந்தேன்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம், ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த கட்சி சிதைந்து விட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அது உங்கள் கருத்து” என பதில் அளித்தவர், பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

Right Menu Icon