--- --:--:-- --

“மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை..” தமிழக ஆளுநர் ரவி விளக்கம்!

1

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என கூறி இருந்தார்.

 

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை அளித்துள்ளார். அதில், காந்தியின் போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டி என தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என்றும், தனது உரையை தவறாக திரித்து சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மேலும், “தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன. அது உண்மை அல்ல. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன். அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் லட்சியங்களாக இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.

 

மகாத்மா காந்தியின் போதனைகள் தன் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கியதாவும் அவரை தான் அவமதிக்கவில்லை என்றும் சொல்லி ஆளுநர் தனது அறிக்கையை முடித்திருக்கிறார்.

Right Menu Icon