--- --:--:-- --

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் – முதலமைச்சர்

1

வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் அம்பேத்கர் கல்வி பயின்றபோது அவர் தங்கியிருந்த இல்லத்தை நேரில் பார்வையிட்டார்.

 

அதைத்தொடர்ந்து அம்பேத்கர், பெரியார் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை பார்வையிட்டார். இதேபோல, மார்க்சியத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
இந்நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது! அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.

 

இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட #TamilDiaspora-விற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon