மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை..!
மனைவி இறந்த துக்கத்தில் அவரின் நினைவு நாளில் ரவுடி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 34 வயதான பிரசாத் சூளைமேடு காவல் நிலையத்தில் கேட்டகிரி ரவுடி பட்டியலில் இருந்து வரும் பிரசாத் நேற்று நள்ளிரவில் குடிசை வீட்டில் இருந்த நிலையில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதையடுத்து வீட்டில் இருந்து புகை வரவே அருகில் வசித்து வந்த அவரது சகோதரர் பிரதீப் என்பவர் காவல் கட்டுப்பாட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் .
இந்த நிலையில் உடலில் காயங்களுடன் இருந்த பிரசாத்தை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பு பிரிவில் அனுமதித்தனர். உடலில் 67% தீக்காயத்துடன் இருந்த அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி கடந்த ஆண்டு இதே நாளில் தீக்குளித்து இறந்ததாகவும் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் தாமும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





