--- --:--:-- --

விவாகரத்து கேட்ட மனைவியின் காலை வெட்டிய கணவன்..!

5

ர்நாடகாவில் விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவியின் காலை முன்னாள் ராணுவ வீரர் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த சிவாலிங்கப்பா என்பவருக்கும் ஜெயமாலா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

சிவாலிங்கப்பா இந்திய ராணுவத்தின் சிப்பாயாக பணிபுரிந்தவர். திருமணத்திற்கு பின் பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கின் விசாரணைக்காக தனது சகோதரருடன் குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அப்போது திடீரென தான் வைத்திருந்த ஆயுதங்களால் ஜெயமாலாவை தாக்கியுள்ளார். அவரின் காலை துண்டாக வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Right Menu Icon