உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும், சாம்பியனான இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஊழியர்கள் என மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ.
இதனிடையே, வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.





