--- --:--:-- --

Surgery செய்யப்பட்ட பிறகு சீரியல் நடிகை ஆல்யா மானசா நிலைமை எப்படி உள்ளது?

7

சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன் காலடியடுத்து வைத்து ஒரு கலக்கு கலக்கிவரும் நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அந்த சீரியலை தொடர்ந்து திருமணம், குழந்தை என பிஸியாக இருந்தார்.

 

பின் ராஜா ராணி 2 தொடரில் நடிக்க தொடங்கிய இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார்.

 

இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு ஆல்யா மானசா புதியதாக சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். அண்மையில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது, TRP யில் நல்ல வரவேற்பை தான் பெற்று வருகிறது.

 

நியூஇயரை துபாயில் கொண்டாடிய நடிகை ஆல்யா மானசாவிற்கு அண்மையில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரது கால் எழும்பு முறிவு ஏற்பட கட்டு போட்டு நடக்க முடியாமல் இருந்தார்.

 

நேற்று அவருக்கு காலில் சர்ஜரி நடந்துள்ளது, தற்போது அவரது சர்ஜரி நல்லபடியாக முடிந்துள்ளது என்றும் விரைவில் அவர் அதில் இருந்து மீண்டும் வருவார் என நடிகையின் கணவரும், நடிகருமான சஞ்சீவ் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

Right Menu Icon