துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் தொகுப்பாளினி பிரியங்கா..!
விஜய் டிவி தொகுப்பாளர்களில், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு தற்போது வரை ரசிகர்களை மகிழவைத்து வருபவர் பிரியங்கா. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு, கடைசி வரை வந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தலைகாட்டும் தொகுப்பாளினி பிரியங்கா, ரசிகர்களை கவரும்படி ஜாலியான வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது, துளி கூட மேக்கப் போடாமல், விளையாட்டுத்தனமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.






