நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 8) விடுமுறையாகும்.
இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.





